தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து க ஈச்சம்பாடி காலனி தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சீர் விஜயன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் புது பானையில் பொங்கலிட்டு, மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சீர் விஜயன், தற்காலிக ஆசிரியர் வ கயல்விழி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா, காலை உணவு திட்டம் பணியாளர்கள், துப்புரவு பணியாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக