கல்குவாரி செயல்பட தொடங்கும் என்பதை அறிந்த அப்பகுதியில் சேர்ந்த 10 க்கு மேற்பட்ட விவசாயிகள் வனவிலங்குகள் வாழக்கூடிய பகுதி,அருகில் விவசாய நிலங்கள் தென்னை, வாழை, பாக்கு போன்றவைகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருவதாகவும், நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த கல்குவாரி அமைந்தால் போக்குவரத்திற்கு இடையூறு இருக்கும் எனவும், பொதுமக்கள் சென்று வருவதற்கு இடையூறாக இந்த கிரானைட் குவாரி இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்டனர்.
தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டிகாவல் ஆய்வாளர் வான்மதி,வருவாய் ஆய்வாளர்விமல் மற்றும் வருவாய்த் துறையை சார்ந்த அதிகாரிகள் சம்பவம் அறிந்து இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், இதுகுறித்துஉரிய விசாரணை மேற்கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி உறுதியளித்தனர்.
அப்போது கிரானைட் குவாரி அமைக்க அரசிடம் ஒப்பந்தம் பெற்றுள்ள ஒப்பந்ததாரர் நடராஜன் தெரிவிக்கையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடும், நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று அரசுக்கு உரிய ஒப்பந்த பணத்தைப் செலுத்தி தாம் சட்டப்படி கல்குவாரி அமைப்பதற்கான ஆவணங்களுடன் வந்திருப்பதாகவும், அரசின் அனுமதி பெற்ற பின்பு விவசாயிகளின் ஒப்புதலோடு இந்த பகுதியில் கல்குவாரியை செயல்படுத்திக் கொள்வதாகவும் செய்தியாளர்களிடம் உறுதியளித்தார்.
இதையடுத்து விவசாயிகள் அதிகாரிகளின்உறுதியை ஏற்று அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர், இச்சம்பவத்தால் பாப்பிரெட்டிப்பட்டி மெனசி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக