தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளார் பட்டியல் பார்வையாளர் மரு.கஇரா.ஆனந்தகுமார், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, அவர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (03.01.2025) நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல்/ திருத்தல் தொடர்பாக வரப்பெற்ற படிவங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பணிகள் குறித்து பார்வையிடும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தருமபுரி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் (பயிற்சி) ஆணையாளர் மரு.இரா.ஆனந்தகுமார் ஒ.ஆ.ப,அவர்கள் மூன்றாவது கட்டமாக இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து வாக்காளர் பட்டியல் வெளியிடூவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில், கடந்த 2024 அக்டோபர் மாதம் 29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடந்தது. கடந்த நவம்பர் 28-ம் தேதி வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வரும் 06.01.2025 அன்று வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், இறுதிவாக்காளர் பட்டியல் அச்சிடுவது குறித்தும் மற்றும் வாக்காளர்களுக்கு புதிய வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவு அஞ்சலில் அனுப்பிவைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கெளரவ்குமார், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. ஆர்.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சி.சின்னுசாமி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அசோக்குமார் மற்றும் தேர்தல் பிரிவுஅலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக