முகாமிற்கு தமிழ்நாடு கிராம வங்கியின் கிளை மேலாளர் எழில்வேந்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி தர்மபுரி கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காரிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் கலந்து கொண்டார். இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளரும் நிதிசார் கல்வி ஆலோசகர் முருகன் கலந்து கொண்டு பி.எம்.எஸ்.பி.ஒய் திட்டம் குறித்து விளக்கி பேசினார்.
ஆண்டுக்கு ஒரு முறை ரூ. 30 மட்டும் செலுத்தினால் போதும் காப்பீடாக 2 லட்சம் வரை பெறலாம் என அவர் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் பயனாளி சுதா என்பவரின் கணவர் விபத்தில் இறந்ததை அடுத்து காப்பீட்டு தொகை 2 லட்சம் அவருக்கு வழங்கப்பட்டது. முகாமில் மகளிர் சுய உதவிகுழுவை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக