தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி அடுத்த முத்துக்கவுண்டன் கொட்டாய், பாப்பாரப்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட கரும்பாலைகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு மட்டும் இன்றி ஆண்டு முழுவதும் வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது.
இவை தருமபுரி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது, குறிப்பாக இந்தாண்டு பொங்கல் பண்டிக்கைக்காக முத்துக்கவுண்டன் கொட்டாய், பாப்பாரப்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கரும்பாலைகளில் கடந்த சில தினங்களாக வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வெல்லத்தில் செயற்கை நிறமூட்டிகள், யூரியா உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறதா என, தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், குமணன், நந்தகுமார், அருண், சரண், உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கரும்பாலைகளில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தில் இருந்து சோதனைக்காக மாதிரிகளை எடுத்து சென்றனர். மேலும், வெல்ல உற்பத்தியில் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக