மை தருமபுரி அமைப்பானது கடந்த 12 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் பல மனிதநேயமிக்க சேவைகளையும், உதவிகளையும் செய்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவமனை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதியம் மற்றும் மாலை வேளைகளில் உணவு வழங்கி வருகின்றனர். இன்று ஆங்கில புத்தாண்டு அன்று மை தருமபுரி அமைப்பின் 13 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காலை, மதியம், மாலை மூன்று வேளையும் சுமார் 2200 நபர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ், ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ் பாபு, JCI தலைவர் ரவிக்குமார், சீனிவாசன், ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் உணவு வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக