பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அகர்வால் கண் மருத்துவமணை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து  சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு  இலவச  கண் சிகிச்சை முகாம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது.

 

இம்முகாமில் கண் மருத்துவரகள்  ராஜேஷ், சுமித்ரா, சர்வமால்யா, சண்முகம் ஆகியோர்  வாகன ஓட்டிகளுக்கு  கண்புரை, கண் நீர் அழுத்தநோய், கண் நோய், மாலைக்கண் நோய், தூரப் பார்வை, கிட்ட பார்வை, கண்களில் தானாக நீர் வடிதல், மாறுகண் ,  உள்விழிலென்சு  உள்ளிட்ட கண் சம்மந்தமான நோய்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்தனர்.


இம்முகாமில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் கண்புரை மற்றும் கண் நோயால்  பாதிக்கப்பட்டவர்கள்   கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை  செய்யப்பட்டது. இம்முகாமில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்த உரிமையாளர்கள், டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் என  திரளானோர்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad