பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவை சார்பில் காந்தி 77- ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பாப்பாரப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரவையின் அமைப்பாளர் வே.விசுவநாதன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன், பேரவை துணை அமைப்பாளர் ஏ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.சக்திவேல் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் மு.சிலம்பரசன், பொருளாளர் கே.வேலாயுதம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வேடியப்பன், நாகராஜ், கணேசன், வேணு, சிஐடியூ கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முடிவில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் டி.தங்கராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக