பெலமாரனஅள்ள அடுத்த ஆமேதனஅள்ளி கிராமத்தில் 4.60 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு - வருவாய் துறையினர் நடவடிக்கை‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

பெலமாரனஅள்ள அடுத்த ஆமேதனஅள்ளி கிராமத்தில் 4.60 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு - வருவாய் துறையினர் நடவடிக்கை‌.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த ஆமேதன அள்ளி கிராமத்தில் ஊர் மைய பகுதியில் 4 ஏக்கர் 60 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் ஆமேதனஅள்ளி, பெலமாரனஅள்ளி, செம்மனஅள்ளி, நல்லூர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பண்டிகை விழா காலங்களிலும், செல்லியம்மன், சாக்கியம்மன் கோயில் திருவிழாக்கள், எருதாட்டம், தை மாதத்தில் நடைபெறும் மண்டு திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகள்  நடத்தவும் பயன்படுத்தி வந்தனர்.


இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனிநபர்கள் சிலர் அப்பகுதியில்  கொட்டகைகள் அமைத்து அராஜகமாக அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி மனு அளித்திருந்தனர்.


கலெக்டர் சாந்தி அவர்களின் உத்தரவின் பேரில் இன்று தாசில்தார் ரஜினி தலைமையில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர்கள் என 50 க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 .ஏக்கர் 60 சென்ட் அரசு புறம்போக்கு  நிலத்தை மீட்டனர்.


அது சமயம் பாலக்கோடு துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணி, பாலசுந்தரம், வீரம்மாள், பார்த்தீபன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad