தருமபுரி கிழக்கு மாவட்ட பசுமைத்தாயகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஒடசல்பட்டி கணவாய் மாரியம்மன் கோவிலில் வளாகத்தில் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் P.அருள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட செயலாளர் கே.என்.வீரமணி வரவேற்று பேசினார்.
இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல. வேலுசாமி, தருமபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் இரா. அரசாங்கம், இளைஞர் சங்க மாநில செயலாளர் பி.வி.செந்தில், பசுமைத் தாயகத்தின் மாநில துணை செயலாளர் க.மாது மற்றும் பசுமைத்தாயகத்தின் மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட துணை தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பசுமைத் தாயகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பசுமைத்தாயகத்தின் வளர்ச்சி பணிக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இறுதியில் பசுமைத் தாயகத்தின் மாவட்ட துணை செயலாளர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக