தருமபுரி JCI அமைப்பின் சார்பில் பசுமை பொங்கல் விழா தருமபுரி அடுத்த நடுஹள்ளி அருகே அமைந்துள்ள கமலம் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது, இந்த விழாவில் மாசில்லா வகையில் பாதுகாப்பாக பசுமை பொங்கலை கொண்டாட வேண்டும் என மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலசவமாக 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தருமபுரி JCI அமைப்பின் தலைவர் பாபு, செயலாளர் கணேஷ், பொருளாளர் பிரசாந்த், சமூக வளர்ச்சி பிரிவின் துணை தலைவர் நிரோஷா, பிரசன்னா, சிவகுமார், ஸ்ரீனிவாசன், சிவகுமார் மற்றும் கமலம் சர்வதேச பள்ளியின் தாளாளர் முத்துக்குமரன், முதல்வர் லதா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக