இந்தப் பேரணி அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திருமதி. லதா, கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியானது சேவாலயா இல்லத்திலிருந்து சேலம் நெடுஞ்சாலை வழியாக ஒட்டப்பட்டி வரை பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் மாணவ மாணவிகள் புகையில்லா போகி கொண்டாடுவோம் புகைப்பிடிப்பதனால் வரும் தீமைகள் இது போன்ற வசனங்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து விளக்கங்களை அளித்தனர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக வாகன ஓட்டிகளுக்கு புகையில்லா போகி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது மக்களுக்கு பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பேரணி ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி பேராசிரியர்கள் திருமதி. மகேஸ்வரி, ரஞ்சிதா, குமுதா, செல்வி, கல்லூரி துணைப் பேராசிரியர் சந்தியா ,கல்லூரி நிர்வாக மேலாளர் அனிதா ,சுபாஷினி ஆகியோர் ஒன்றிணைந்து பேரணியை வழி நடத்தினர் நன்றி உரையாக ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதி பாசு அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக