தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 ஜனவரி, 2025

தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகள் விரைவில் துவக்கம் குறித்தும் மற்றும் திட்ட செயலாக்கம் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகள் விரைவில் துவக்கம் குறித்தும் மற்றும் திட்ட செயலாக்கம் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.01.2025) நடைபெற்றது.


விபத்துக்களை நிரந்தரமாக தவிர்க்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. தொப்பூர் சாலை அமைப்பது தொடர்பான நில எடுப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதை தொடர்ந்து மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவை மாற்றியமைப்பது குறித்தும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமலும் பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.


மேலும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் முடிவடைவதையொட்டி அங்கு உள்ள துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.ராஜாங்கம், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, சேலம் திட்ட இயக்குநர் (தேசிய நெடுஞ்சாலைகள்) திரு. சீனிவாசலு, உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) திரு.பன்னீர்செல்வம், திலீப் பில்ட் கான் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு.சின்ஹா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.உதயகுமார், தருமபுரி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் திருமதி.சுமதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad