இந்நேர்வில் அரசு கடித எண். 5401/AH3-2/2024-1, Animal Husbandary, Dairiying, Fishieries and Fisherman Wealfare Dept., dated 28.11.2024-ன் படி வழங்கப்பட்டுள்ள அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி (SOP) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக உரிய வழிமுறையாக அரசாணை பெற்றும், அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
எனவே மேற்படி 22.01.2025-ம் தேதியன்று ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதியேதும் வழங்கப்படவில்லை என்றும், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் நேர்வில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய சட்டப்படடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக