புலிக்கரை ஸ்ரீ குந்தியம்மன் கோவிலில் கரகத் தீமிதி திருவிழா கோலாகலம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

புலிக்கரை ஸ்ரீ குந்தியம்மன் கோவிலில் கரகத் தீமிதி திருவிழா கோலாகலம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்‌.

தர்மபுரி மாவட்டம் புலிகரை அருகே கோவிலூரில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீ குந்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் 3ம்  நாள் கரக திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே சாமிக்கு பால் இளநீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் மற்றும் ஆராதனையும் அதனை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ குந்தியம்மனுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது. 


மேலும் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட கரகம் அங்குள்ள கிராமத்தின் வழியாக திருவீதி உலா வந்தது. அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பூஜைசெய்து தீ மிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று நடந்த விழாவில் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


இக்கோயிலில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். பக்தர்களுக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad