சூடப்பட்டி நெடுஞ்சாலையில் நாய் குறுக்கே வந்ததால் விபத்து - கூலி தொழிலாளி பலத்த காயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

சூடப்பட்டி நெடுஞ்சாலையில் நாய் குறுக்கே வந்ததால் விபத்து - கூலி தொழிலாளி பலத்த காயம்.


தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த ஜக்க சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது. 44) விவசாய கூலி, இவருக்கு  திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இவர் நேற்று மாலை காரிமங்கலம் அடுத்துள்ள அனுமந்தபுரத்தில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளிசந்தையிலிருந்து மல்லுபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.


சூடப்பட்டி நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமானார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad