அஇஅதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்ன டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா ஒருங்கிணைந்த ஒன்றிய பாசறை இளைஞரணி செயலாளர் சரவணன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதே போல மாரண்டஅள்ளி இந்தியன் வங்கி முன்பு அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில் மற்றும் நகர செயலாளர் கோவிந்தன் தலைமையில் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கபட்டது, இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக