தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகில் ஆற்றங்கரையோரம் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொது மயானம் உள்ளது. இந்த மயானமானது பஞ்சப்பள்ளி ஆற்றின் மறுகரையில் அமைந்துள்ளதால், ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும், இதற்காக அமைக்கப்பட்ட சிறு பாலம் மிகவும் குறுகியதாக 3 அடி அளவு மட்டுமே உள்ளதால் அவ்வழியாக இறந்தவர்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்ப்பட்டு வருகிறது.
இந்த சிறு பாலத்தை அகற்றி விட்டு அகலமான பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக இன்று பஞ்சப்பள்ளி மயான பாதையை எம்.பி.ஆ.மணி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மயானத்திற்க்கு செல்ல 16 அடி அகலமான புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
அது சமயம் திமுக ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், எம்.வீ.டி.கோபால், இல.கிருஷ்ணன், முனியப்பன், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், விவசாய அணி சிவக்குமார், முகுந்தன், சாதன், ராஜா, அருள்பிரகாஷ் கவுன்சிலர் காரத்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக