தருமபுரி அடுத்து நல்லம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காமராஜ் அவர்களின் பேத்தி தலைமை தாங்கினார் கமலிகா காமராஜ், வரதராஜ், பெருமாள், பரமசிவன், சித்தசாமி, இருசாகவுண்டர், சீனிவாசன் ஆகிய தியாகிகள் தலைமை தாங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், இலவச பேருந்து பயண அட்டை குடும்பத்திற்கு வழங்க வேண்டும், இலவச மருத்துவ பயன அட்டை வழங்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகவள்ளி, கிருஷ்ணகிரி ஜெயபிரகாஷ், சோமசேகரன், சந்திரன், நாமக்கல் குமாரபாளையம் செல்வராஜ், செண்பகவல்லி, ஜான்சி ராணி, சென்னை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக