ஜெர்தலாவ் ஊராட்சியை பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைக்கும் அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

ஜெர்தலாவ் ஊராட்சியை பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைக்கும் அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு  ஜெர்தலாவ் ஊராட்சியை பாலக்கோடு பேரூராட்சியுடன்  இணைக்க கடந்த வாரம் தமிழக அரசு அரசானை பிறப்பித்தது. இதனை கண்டித்து சிக்கார்தனஅள்ளி மந்திரி கவுண்டர் மாரியப்பன்  தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், முன்னாள் வார்டு  கவுன்சிலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெர்தலாவ், கோடியூர், திம்மம்பட்டி, சிக்கார்தனஅள்ளி, மணியகாரன் கொட்டாய், மாக்கன் கொட்டாய், எண்டப்பட்டி,   கணபதி கொட்டாய், செங்கோடபட்டி உள்ளிட்ட கிராமங்கங்களில் 4 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை பாதிக்கப்படும் என்றும், வாழ்வாதார மற்றும் வீட்டு வரி, நில அதிக அளவு உயரும் மேலும் பல்வேறு வாழ்வார பிரச்சனைகள் ஏற்படும் எனவும் எனவே  ஜெர்தலாவ் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கூடாது எனவும், இனைப்பிற்க்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில்  500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என  கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad