மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுதல், பசியால் இருப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு சேவை, தீபாவளி தினத்தன்று காப்பகங்களுக்கு புத்தாடைகள் வழங்கிறனர். இந்த தமிழர் திருநாள் பொங்கல் தினத்தன்று பதினைந்து கைம்பெண்களுக்கு பொங்கல் பொருட்கள், புத்தாடைகள் வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு கட்டுமான தொழிலாளர் சங்கம் பொது செயலாளர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், ஜெய்சூர்யா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக