தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சீட் பெல்ட் அணிதல் வாகனப் பேரணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சீட் பெல்ட் அணிதல் வாகனப் பேரணி.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சீட் பெல்ட் அணிதல் வாகனப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து, துவக்கி வைத்தார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சீட் பெல்ட் அணிதல் வாகனப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.01.2025) கொடியசைத்து, துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:


பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ”சாலைப் பாதுகாப்பு வாரம்" கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 01.01.2025 முதல் 31.01.2025 வரை கடைபிடிக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 


தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் ஆண்டில், தருமபுரி மாவட்டத்தில் சாலைவிபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தவிர்க்கும் பொருட்டு வாகனங்களை இயக்கும் பொதுமக்கள்அனைவரும் மிதமான வேகத்துடன் தலைக்கவசம், மற்றும் சீட் பெல்ட்களை அணிந்து, கைபேசியை உபயோகப்படுத்தாமல், சாலைவிதிகளை முழுமையாக கடைப்பிடித்து, விபத்தில்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்கி பாடுபடவேண்டும். மேலும், சாலைபாதுகாப்பு உறுதிமொழி பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


வாகன ஓட்டுநர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முறையாக வாகனத்தை இயக்க வேண்டும். சாலை விபத்துகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது. சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிப்பது நம் அனைவரின் கடமையாகும்.


நான்கு சக்கர வாகனங்கள் இயக்கும் பொழுது சீட்பெல்ட்  கட்டாயம் அணிந்து, சாலைக் குறியீடுகளையும் விதிகளையும் மதித்தால் விபத்துகளை தடுத்திட முடியும். எனவே சாலைவிதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன், இயக்கூர்தி ஆய்வாளர்கள் திரு.யு.மு.தரணிதர், திரு.சு.பாலசுப்ரமணியன், திரு.பு.வெங்கிடுசாமி, திரு.யு.குலோத்துங்கன், வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள், வாகன விற்பனையாளர்கள் மற்றும்  தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad