கடந்த ஜனவரி 24, 25, 26 தேதி அன்று மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 7 வது தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட் பேஸ்கட்பால் சேம்பியன்ஷிப் -2025 (7th National Roller skate Basketball Championship 2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா, ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு சார்பாக 40 க்கும் மேற்பட்டவர்கள் 14,17,19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடினர்.
தமிழ்நாடு சார்பாக தருமபுரி மாவட்டத்தில் இருந்து ச. நேஷந்த் (U.17 செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி), v. கௌதம் (அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), p. விஜய் வர்ஷன் (விஜய் வித்யாஷரம் CBSE). A. ஹரிஹரன் (அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஆகிய நான்கு மாணவர்களும் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். Overall championship பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இம்முறையும் தமிழ்நாடு பெற்றது.
இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் சர்வதேச அளவில் விளையாட தகுதி பெறுகிறார்கள் என தமிழ்நாடு ரோலர் ஸ்கேட் பேஸ்கட்பால் செயலாளர் திரு. பூஞ்சோலை அவர்கள் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக