தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி தேர்வு நிலை பேருராட்சியின் செயல் அலுவலரலாக இருந்த சித்திரைகனி அவர்கள் கடந்த ஒரு ஆண்டிற்க்கு முன்னர் பணி மாறுதலாகி சென்றார். அதன் பின்னர் மாரண்டஹள்ளி பேரூராட்சிக்கு நிரந்த செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் பொறுப்பு அலுவலர்கள் மட்டுமே செயல்பட்டு வந்தனர்.
கடந்த 6 மாதமாக காரிமங்கலம் செயல் அலுவலர் ஆயிஷா அவர்கள் கூடுதல் பொறுப்பாக மாரண்டஅள்ளி பேரூராட்சியை கவனித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த திருமதி சசிகலா அவர்கள் மாரண்டஅள்ளி செயல் அலுவலராக நியமிக்கபட்டார். அதனை தொடர்ந்து மாரண்டஅள்ளி பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக சசிகலா அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய செயல் அலுவலருக்கு பேரூராட்சி தலைவர் எம்.ஏ வெங்கடேசன், கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை காவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக