வரும் 23 முதல் 25ம் தேதி வரை இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜனவரி, 2025

வரும் 23 முதல் 25ம் தேதி வரை இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லை.


திட்ட பராமரிப்பு கோட்டம் கிருஷ்ணகிரி கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகள், காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26 ஊராட்சிகள் மற்றும் பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சிகள், பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம் மற்றும் மாரண்டஹள்ளி பேரூராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 23.01.2025-ல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது என மின்வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலக்கோடு, மூங்கில்பட்டி அருகில் பிரதான 1500mm இரும்பு குடிநீர் குழாயில் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது அதை சரிசெய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால் 23.01.2025 முதல் 25.01.2025 ஆகிய மூன்று நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.


எனவே மேற்கண்ட பகுதிகளில் இம்மூன்று நாட்களுக்கும் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad