பாலக்கோடு ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில் அணு விஞ்ஞானம் குறித்து விளக்க பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

பாலக்கோடு ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில் அணு விஞ்ஞானம் குறித்து விளக்க பயிற்சி.

தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோடு, ஸ்ரீ வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளியில் அணுவிஞ்ஞானத்தின் வளர்ச்சி மற்றும் அவசியம் குறித்து, அணு யாத்திரை 2025 என்ற தலைப்பில் கல்பாக்க அணுமின் நிலைய மாதிரி அமைப்புக் காட்சி நிகழ்வுகள் மற்றும் விளக்க பயிற்சி நடைப்பெற்றது. 


இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் அருள்குறிஞ்சி அனைவரையும் வரவேற்று பேசினார். ஸ்ரீ மூகாம்பிகை கல்வி குழுமத்தின் தாளாளர் கோவிந்தராஜ் அவர்கள் நிகழ்ச்சிக்கு  தலைமை தாங்கி பேசுகையில் இன்றைய நவீனகால பெரும் வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியலாகும். இன்றைய அதிநவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவங்களை நன்குணர்ந்துகொண்டு நீங்களும் உயர்பட்டங்கள் பயின்று இதுபோன்ற அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு உயர்ந்த முன்னேற்றங்கள் அடைந்து நமது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தலைமையுரையாற்றினார்.


நிகழ்ச்சிக்கு கே.ஜி.எம்.  மருத்துவமனை  நிறுவனத் தலைவர் மருத்துவர்  பாலகிருஷ்ணன் பேசும் போது   இந்த அரிய வாய்ப்பை  பயன்படுத்தி  வாழ்வில் உயர்நிலைக்குச் செல்ல வேண்டும் என வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்த கல்பாக்க அணுமின்நிலைய ஆராய்ச்சி குழுத்தலைவர் முனைவர் . குமரேசன் அவர்கள் இன்றைய மின்சார தேவை. அதற்கு அணுமின் உலைகளின் அவசியம். அணுமின்நிலைய செயல்பாடுகள். இதனால் நாட்டிற்கு ஏற்படும் வளர்ச்சி ஆகியவற்றைக் குறித்து நீண்ட விளக்கமளித்தார். 


மேலும், மாணவிகளின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார். அவரைத் தொடர்ந்து அவருடன் பயிற்சிப் பிரிவில் பணியாற்றும் சாய்பிரியா  அணு ஆராய்ச்சித் துறையில் உயர்கல்வி குறித்தும், அங்குப் படிப்பதற்கும், பயிற்சி மேற்கொண்டு பணிவாய்ப்பு பெறுவதற்கும், உண்டான வழிமுறைகள் குறித்தும் மாணவிகள் பயன்பெறும் வகையில் எடுத்துரைத்தார்.


இந்நிகழ்ச்சியில்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், பள்ளி கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad