தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பொ.மல்லாபுரம் பேரூராட்சி மாதா கோவில் தெரு, வினோபாஜி தெரு பகுதியில் வசிக்கும் தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் இனத்தை சார்ந்த மக்களும் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 1985 மற்றும்1990 ஆண்டுகளில் சுமார் 200 பேருக்கு அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
தற்போது பட்டா வழங்கி 40 ஆண்டுகள் ஆகியும் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா இருந்தும் இடம் எதுவென்று தெரியவில்லை, சில ஆக்கிரமிப்பாளர்களால் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், சில சமூக விரோதிகளில் அச்சுறுத்தாலும் பட்டா வைத்துக் கொண்டு இடம் எது என்று தெரியவில்லை என தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர், அவைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்தித்தாள்களில் வந்தவற்றையும் எடுத்துச் சென்று அரசின் கவனத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரூர் கோட்டாட்சியர் சின்னுசாமி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சனிக்கிழமைஅரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டிருந்த இலவச வீட்டுமனை பட்டாவதற்கான இடப்பகுதிக்கு நேரடியாக ஆய்வு செய்து வீடு வீடாக இது யாருடையது, வீடு யார் பேரில் உள்ளது, காலியாக உள்ள இடங்களில் யார் இருப்பது என்பது குறித்தும் மேலும் வீட்டு மனை பட்டா வைத்திருந்தும் இடம் இல்லாதவர்கள் யார் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆரூர் கோட்டாட்சியர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ஜெயசெல்வன் மற்றும் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கண்ட பகுதிக்கு மூன்று குழுக்களாக பிரிந்து வீடு வரும் ஆய்வு மேற்கொண்டனர், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக