மேலும் கொண்டகர அள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திப்பிரெட்டி அள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள கொப்பக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், வே.முத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள நாகலம்மன் கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து, ரூ.5.72.இலட்சம் மதிப்பீட்டில், டெஸ்க் பென்ச்களை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஆ.கோவிந்தசாமி மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட துணை செயலாளர், ராஜேந்திரன், பேரூர் செயலாளர், ராஜா, ஒன்றிய செயலாளர், சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர், வஜ்ஜிரவேல், கடத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர், சக்திவேல், கடத்தூர் பேரூர் செயலாளர், சந்தோஷ், வார்டு உறுப்பினர், விஜயலட்சுமி கேசவன், ஒன்றிய குழு உறுப்பினர், சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், கந்தசாமி, தாய்செல்வம், மற்றும் கட்சி நிர்வாகிகள், மாதேஷ், சேகர், இளையராஜா, முருகன், முருகேசன், பாலு, வெங்கடேஷ், செல்வம், செந்தில், சேட்டு, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக