பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து 144 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து 144 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை இந்த ஆண்டு 2வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று  தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைப்பெற்ற விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ, திமுகை சேர்ந்த தர்மபுரி எம்.பி. வக்கில் ஆ. மணி ஆகியோர் இணைந்து   விவசாய பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றனர்.


இன்று முதல் மே மாதம் 22ம் தேதி வரை 140 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர், வழியாக தும்பல அள்ளி அணையை சென்றடையும், இதன் மூலம்  4500 ஏக்கர் விவசாய நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி அன்பழகன், லாவண்யா ராஜா, மாவட்ட கவுன்சிலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாராயனசாமி, முத்துமணிஆனந்தன், உமாதுரை, பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திகேயன், யதிந்தர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவி பொறியாளர் சாம்ராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முனியப்பன், வக்கில்கோபால்,  இல.கிருஷ்ணன், மற்றும் திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்தது விவசாயிகளுக்கும், பொதுமக்களும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad