தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியுடன் ஜெர்தலாவ் ஊராட்சியை இணைக்க கடந்த வாரம் தமிழக அரசு அரசானை பிறப்பித்தது. இதனை கண்டித்து கிழக்கு ஒன்றிய பாமக சார்பில் ஒன்றிய செயலாளர் துரை தலைமையில் சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெர்தலாவ், கோடியூர், திம்மம்பட்டி, சிக்கார்தனஅள்ளி, வாழைத்தோட்டம், கணபதி கொட்டாய், செங்கோடபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை பாதிக்கப்படும், வீட்டு வரி, நில வரி அதிக அளவு உயரும் மேலும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் ஜெர்தலாவ் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என ஆர்ப்பாடம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிர்வாகிகள் நவீன்குமார், மகேந்திரன், சம்பத், கன்னிகவுண்டன், கோவிந்தராஜ், மாணிக்கம், முத்துசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக