பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஜனவரி, 2025

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு  பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சௌமியா அண்புமணி கைது செய்ததை கண்டித்து பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் துரை தலைமையில் ஆர்ப்பாட்டம்  செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சந்திரன், உழவர் பேரியக்க ஒன்றிய செயாளர் மணி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மாரி முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலாஜி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பசுமை தாயக அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணியை கைது செய்ததை கண்டித்தும், தமிழக அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பாலக்கோடு போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வசந்த், ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் முனியப்பன், ஒன்றிய தேர்தல் பணி தலைவர் விநாயகம், ஒன்றிய தேர்தல் பணி செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அருள், முத்து, வெங்கடேசன், வேலு, பெருமாள், சிவா, ராமு,ரவி, முருகேசன், கிருஷ்ணன், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad