அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியிம், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், தமிழக அரசை கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி, சௌமியா அன்புமணி தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சௌமியா அன்புமணி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, பென்னாகரம் பேருந்து நிலையத்தில், 50க்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் செய்ய முற்பட்டனர், உடனடியாக பென்னாகரம் காவல்துறையினர் தடுத்து பாமகவினர், சுமார் 50 பேர், கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக