தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் ராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி,முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அங்கமுத்து, துணைத் தலைவர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் ஆசிரியர் சுப்பிரமணி வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற முழுமையாக ஒத்துழைப்பதாக பெற்றோர்கள் உறுதி அளித்தனர். மேலும் பள்ளி வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் குமார் ஆசிரியர்கள் மாராகவுண்டர், கோவிந்தராஜ் கர்ணன், சுரேஷ், பிரபாகரன் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவ - மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக