தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளியில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பொதுவாக வேளாவள்ளியில் உள்ள மண்டு பகுதியில் திருவிழா கொண்டாடுவது வழக்கம். சமீப காலமாக ஒரு சில காரணங்களால் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டு ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை மண்டு பகுதியில் திருவிழா நடத்த கூடாது என கூறி வந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகையன்று அப்பகுதியில் திருவிழா நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பிற்க்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கருதிய மாவட்ட நிர்வாகம் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து பாலக்கோடு தாசில்தார் அலுவகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன், தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் கருத்து வேறுபாடுகள், பாகுபடுகள் மற்றும் கசப்புணர்வை மறந்து ஊர் மக்கள் ஒன்றினைந்து செயல்பட கேட்டுக் கொண்டனர்.
அதனை ஏற்று ஒற்றுமையுடன் செயல்படுவதாக இருதரப்பினரும் எழுத்துபூர்வமாக உறுதி அளித்தனர். இக்கூட்டத்தில், பேளாரஅள்ளி, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் விழாக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக