தமிழ்நாடு அரசு ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை ஊக்குவிப்பதிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதன் பொருட்டு அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதுடன், மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு அங்கமாக தமிழக முழுவதும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வினை 2025-ஆம் ஆண்டு முழுவதும் மாதங்களின் இறுதி சனிக்கிழமைகளில் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நம் மாவட்டத்தில் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் நீர் நிலைகளை சுத்தம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
எனவே மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்நிழ்வில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றம் சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தம் அன்றாட வாழ்வில் நெகிழியை புறக்கணித்து தமிழகத்தில் நம் மாவட்டத்தை நெகிழி இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக எடுத்து கொண்டு அனைவரும் இந்நிகழ்வில் பங்காற்றுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக