தர்மபுரி மாவட்டம், பாலக்கேடு பேரூராட்சி சார்பில் நெகிழி சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. நெகிழி பயன்பாடு இல்லா பேரூராட்சியாக மாற்றும் முமு முயற்சியில் ஈடுபட்டு வரும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் அதன் தொடர்ச்சியாக நெகிழி சேகரிப்பு மற்றும் நெகிழி பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து தொடங்கப்பட்ட பேரணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது கடைவீதி, தக்காளிமண்டி, பைபாஸ் சாலை வழியாக முக்கிய வீதி வழியாக சென்று நெகிழி பயன்பாட்டை தவிர்க்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக