தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருந்து தொடங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த போலீசாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கருதி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது.
அதனையொட்டி இன்று பாலக்கோடு உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி ஆகிய காவல் நிலையங்களுக்குப்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் தாசில்தார் அலுவலகம், கடைவீதி, பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம், காவல் நிலையம், புறவழிச் சாலை வழியாக ஊர்வலமாக சென்று விழிப்ணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியின் போது தலைகவசம் உயிர்கவசம், தலைகவசம் அணியாமல் வாகனத்தை இயக்காதே, தலைகவசம் அணிவோம் உயிரை பாதுகாப்போம், உள்ளிட்ட முழக்கங்களுடன் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்களில் அதிக அளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதாகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மேலும் போலீசாரின் தங்கள் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்ட வலியுறுத்த வேண்டும் எனவும், ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என டி.எஸ்.பி.மனோகரன் தெரிவித்தார்.
இந்த பேரணியில் இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், சுப்ரமணி, பார்த்தீபன், வீரம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக