தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கெண்டேணஅள்ளி ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 3.5 ஏக்கர் நிலம் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மீட்டபட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் உத்தரவின் பேரில் மீட்கப்பட்ட நிலத்தில் சுமார் 2500 சதுர மீட்டர் பரப்பளவில் கெண்டேண அள்ளி கிராமத்தில் பொதுமக்களால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் குளம் வெட்டும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ராமசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தர்மன், வார்டு உறுப்பினர்கள் மாரி, பன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர் மதி, மக்கள் நல பணியாளர் தொட்டியம்மாள் ஊர் பெரியவர்கள் வரதராஜ், மணி, குமார், வேலன், சண்முகம், குமார், கோவிந்தராஜ் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கெண்டேணஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிணறு வெட்டும் பணி நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ராமசாமி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக