திமுக பிரமுகரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 ஜனவரி, 2025

திமுக பிரமுகரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மதத்தை இழிவுபடுத்தி பேசிய தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் இலா. கிருஷ்ணனை கண்டித்து தலித் விடுதலை கட்சி மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மூல நிவாசி காவல் படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன், தலித் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் காரிமங்கலம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கட்சி விட்டு நீக்கு என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுரேஷ், பிரசாந்த், சந்தோஷ், தீனா, நாகராஜ், தமிழ்ச்செல்வன், சரசுராம்ரவி, முனுசாமி, அம்பேத்கர், தலித் விடுதலை கட்சி மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad