பாலக்கோடு ஒன்றியம், எர்ரண அள்ளி ஊராட்சியில் உள்ள ரெட்டியூர் சமத்துவபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக ஓகேனக்கல் குடிநீர், மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி இதுவரை வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் தமிழக முதல்வர் வரை பல முறை மனு அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்பகுதியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் வசித்து வருவதால் யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்ச பாகுபாட்டை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்து, நாகராசன், மாவட்ட குழு உறுப்பினர் கலாவதி உள்ளிட்ட கட்சி தோழர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக