மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார் மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி உள்வட்டம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் 203 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 7 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி உள்வட்டம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் 203 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 7 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 102 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 33 பயனாளிகளுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 34 பயனாளிகளுக்கும் என மொத்தம் 169 பயனாளிகளுக்கு ரூ.101.04 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, இணைய வழி இ-பட்டாக்களையும், வருவாய்த் துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.2.47 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து, இயற்கை மரணம், ஈமச் சடங்கு உதவிதொகைகளும், 13 பயனாளிகளுக்கு ரூ.1.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 7 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் (உட்பிரிவு அல்லாதது), வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.1.12 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் நல திட்ட உதவிகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.25,436/- மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளும் என மொத்தம் 203 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 7 இலட்சம் (1,07,00,658/-) மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.


இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், பொது மக்களுக்கும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாக நகரப்பகுதிக்கு இணையாக அரசின் சேவைகள், அடிப்படை வசதிகள் மலை கிராம மக்களுக்கு கிடைக்க முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி உள்வட்டம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்டத்தின் அனைத்துதுறை முதன்மை அலுவலர்களும் பங்கேற்கும் வகையில் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இப்பகுதியை சுற்றியுள்ள குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.


மேலும், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கண்காட்சி அரங்குகள், விளக்க கையேடுகள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் தயாரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்களில் வழங்கப்படுகிறது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறைகளில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்கள் கால்நடை வளர்ப்பு பணிகளில் ஈடுபடுவோர் அரசின் திட்டங்களை பெற்று, பயன்பெற வேண்டும். 


மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்திற்கு கல்வி ஒன்றே மிகச்சிறந்த நன்மைபயக்ககூடியது. கல்வி கற்பதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பு பெற்று பொருளாதாரத்திலும், வாழ்க்கைதரத்திலும் நம்மை மேம்படுத்திகொள்ள முடியும். பின்தங்கிய வகுப்பை சாரந்தவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று, வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிக்க வைத்து, போட்டித்தேர்வுகள் எழுதி அரசு பணிக்கு செல்ல ஊக்க அளிக்க வேண்டும்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பிள்ளைகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குகிறது. மாணவ, மாணவியர்கள் இந்த நிதியுதவியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, கல்வியில் மேன்மையடைய வேண்டும்.


இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக பாலஜங்கமனஅள்ளி, இருசன்கொட்டாய், ஈச்சம்பட்டி, முத்துகவுண்டன் கொட்டாய், முனியன் கொட்டாய், பூசாரிகொட்டாய், போயர்கொட்டாய், வெத்தலைக்காரன் பள்ளம், தேவரூத்துப்பள்ளம், ஊத்துகாரன் கொட்டாய் உட்பட சுமார் 12 குக்கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்றைய தினம் 203 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 7 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


பின்னர் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான் கோட்டை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ. 10.00 இலட்சம் மதிப்பீட்டில் (RO) எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகாரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,  அவர்கள் இன்று காலபைரவர் கோவில் அருகில் தொடங்கி வைத்தார்கள்.


மேலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஏலகிரியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,  அவர்கள் இன்று பார்வையிட்டார்கள். இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) திரு.இளவரசன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி. பாத்திமா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. பவித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், பழங்குடியினர் நல அலுவலர் திரு. பி.எஸ்.கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad