தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 26.01.2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 26.01.2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.


தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தகவல் இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்த்துறை சென்னை அவர்களின் அறிவுரைகள்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம் -கிராம சபைக் கூட்டம் 26.01.2025 அன்று காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. 


அனைத்து ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒருபற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 26.01.2025 குடியரசு தினம் - நடைபெறும் கிராம சபை கூட்டத்தில்

எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்

  1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
  2. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.
  3. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். 
  4. மக்கள் திட்டமிடல் இயக்கம் (People's Plan Campaign) மூலம் 2025-26 குறித்து விவாதித்தல்
  5. இதர பொருட்கள்

என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad