தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுபாப்பு விழிப்புணர்வு பேரணி உதவிக் கோட்டபொறியாளர் மங்கையர்க்கரசி தலைமையில் நடைப்பெற்றது.
இந்த பேரணியானது பாலக்கோடு நெடுஞ்சாலை துறை உட்கோட்ட அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம், கடைவீதி, மைதானம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,வட்டாட்சியர் அலுவலகம், தக்காளிமண்டி வழியாக சென்றது. இப்பேரணியில் தலைக்கவசம் உயிர் கவசம், வளைவில் முந்தாதே, மஞ்சள் கோட்டை தாண்டாதே, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதே என பதாகை ஏந்தி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் உதவிப்பொறியாளர் ரஞ்சித், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலைப்பணியாளர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக