நெடுஞ்சாலை துறை சார்பில்பொம்மிடியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜனவரி, 2025

நெடுஞ்சாலை துறை சார்பில்பொம்மிடியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பேரணி பொம்மிடியில் நடைபெற்றது,  இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி நடூர் காவல் நிலையத்தில் இருந்து நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் தலைமை தாங்கி கொடியசைத்துதுவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் நரசிம்மன், பொம்மிடி காவல் நிலைய ஆய்வாளர் விக்னேஷ், மாரப்பன் மற்றும் காவல் துறையினர், சாலை ஆய்வாளர்கள் வெங்கடேசன், சுதா மற்றும் சாலை பணியாளர்கள் எனஏராளமானவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர், இந்த பேரணி நடூர் பகுதியில் துவங்கி நடை பாதையாக பொம்மிடி பேருந்து நிலையம், கடைவீதி, ரயில் நிலையம், வழியாக தர்மபுரி நெடுஞ்சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.


பேரணியின் போது பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ,துண்டு பிரசுரங்கள் மற்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad