தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கல்கூடப்பட்டி புதிய தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி தலைமையில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 31 ம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனை தொடர்ந்து ஹெல்மெட் விழிப்புணர்வு, சீட் பெல்ட், கண் பரிசோதனை, மது குடித்து வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து அறிவுரை வழங்குதல், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதை தவிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளிடம் தலைகவசம் உயிர் கவசம், மது போதையில் வாகனம் ஓட்டக் கூடாது, மது நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் கேடு, 4 சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் கண்ணன் போலீசார் கிருஷ்ணன், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக