பென்னாகரத்தில் இருசக்கர வாகன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 ஜனவரி, 2025

பென்னாகரத்தில் இருசக்கர வாகன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


பென்னாகரத்தில்  சாலை பாதுகாப்பு  போக்குவரத்து போலீசார்  இருசக்கர வாகன சாலை  பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. 


அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி இருந்து  போக்குவரத்து  போலீசார் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகனத்தில் வாகனம் ஓட்டிகள் இடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை பென்னாகரம் போக்குவரத்து போலீசார் இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் பென்னாகரம்  டி எஸ் பி மகாலட்சுமி தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர பேரணியானது பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி இருந்து  பிடிஒ ஆபிஸ் வழியாக  பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, தாசில்தார் ஆபீஸ் , போடூர் நான்குரோடு, அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி பகுதி வரை சென்றடைந்தது. 


இப்பேரணியில் தலைக்கவசம் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது, வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது விபத்து இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில்  170 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


இதில்  ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி  போக்குவரத்து போலீசார்  சின்னசாமி,மணிமாது மற்றும்  பென்னாகரம்  உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார்  இருசக்கர வாகன பழுது நீக்கும் ஊழியர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad