இதனை தொடர்ந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் நேரு யுவ கேந்திரா சார்பில் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தருமபுரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் நேரு யுவ கேந்திரா தேசிய இளைஞர் தொண்டர்கள் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியானது பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முன்னதாக நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட அலுவலர் திரு. அப்துல்காதர் வரவேற்புரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. தாமோதிரன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. ரகுநாதன், பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு. பிரசாத், வழக்கறிஞர் சுபாஷ் அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார். அதியமான் டிவியின் இயக்குநர் கபில்தேவ் கலந்து கொண்டார்.
முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அடுத்ததாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விடியோ ஒளிபரப்பப்பட்டது. அடுத்தாக இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தன்னார்வலர்களுக்கு டி சர்ட் மற்றும் தொப்பி நேரு யுவ கேந்திரா சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் மற்றும் இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் அலுவலக பணியாளர் வென்னிலா மற்றும் பல்நோக்கு பணியாளர் ரா. முனியப்பன் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக