பாப்பாரப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புக்கள் அகற்றம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

பாப்பாரப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி நெடுஞ்சாலையில் இருபுறமும் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகியவை  ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. 


இதை அடுத்து கலெக்டர் சாந்தி அவர்களின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவி பொறியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமையில் சாலை ஆய்வாளர்கள் அந்தோணி, ஆதிமூலம் மற்றும் சாலை பணியாளர்கள் பாப்பாரப்பட்டி நெடுஞ்சாலையில் பழைய பாப்பாரப்பட்டியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரையிலும், மூன்று பிரிவு சாலையிலிருந்து மின்வாரிய அலுவலகம் வரையிலும் சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்க்கு  சாலையின் இருபுறமும்  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள  ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். தொடர்ந்து ஆக்கிரப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

 

மேலும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வணிக நிறுவனம், கட்டுமான பணிகள் மேற்கொள்பவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad