பாலக்கோடு காவல் நிலையத்தில் ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா பாதுகாப்பு குறித்து டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜனவரி, 2025

பாலக்கோடு காவல் நிலையத்தில் ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா பாதுகாப்பு குறித்து டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் திருவிழாவினை 12 கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் இனைந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.


உள்ளுர், வெளியூர், மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்திற்க்கும் அதிகமாக பக்தர்கள் இத்திருவிழாவில்  கலந்து கொண்டு திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று  பால்குடம், தீச்சட்டி, அலகு குத்துதல், சாமி வேடம் அணிந்து செல்லுதல், வாகனங்களை இழுத்தல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்வர்.


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு நடைபெறும் இத்திருவிழாவானது வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 14 ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு பாலக்கோடு உட்கோட்ட டி.எஸ்.பி.மனோகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.


இதில்  போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும், பக்தர்களுக்கு  இடையூறு இல்லாமல் வணிக நிறுவணங்களின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை வேறு பகுதியில் நிறுத்த நடவடிக்கை எடுப்பது, திருட்டு சம்பவங்களை தடுக்க  கண்காணிப்பு பணிகளை தீவீர படுத்துதல், பக்தர்கள் கூடும் பகுதியிலும் கோயில் வளாகத்திலும் கூடுதல்  கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல் உள்ளிட்டவை குறித்து போலீசாருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad