தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள அருள்மிகு காலபைரவர் மற்றும் சென்றாயசுவாமி சோமேஸ்வரர் வகையறா திருக்கோயிலில் இன்று (26.01.2025) நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.சாகுல் ஹமீத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கலைவாணி, திருமதி.சத்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக